E1M1 03 08 2021

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடந்த 2021.08.03 ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எல்.பெர்னாண்டோ அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இங்கு இவ்வாண்டுக்கான PSDG வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேபோல NSBS, GEMP, CRC புனரமைப்பு வேலைகள் மற்றும் கிராமிய விளையாட்டு மைதான அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சகல வேலைகளையும் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் நிறைவு செய்ய தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இதன் போது சகல அதிகாரிகளுக்கும் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார். 

E1M2 03 08 2021E1M4 03 08 2021E1M4 03 08 2021

  

© Provincial Planning Secretariat - EPC