E1M1 11 01 2021

கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் கீழ் பணிபுரியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் குறைந்த வருமானம் பெறும் ஆசிரியைகளுக்கு ரூபா. 2000.00 பெறுமதியான உணவு வவுச்சர் வழங்கப்பட்டது.
Solidarite Laique Srilanka மற்றும் AFD நிறுவனங்களின் அனுசரணையுடன் சதோச ஊடாக இந்த உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படுகின்றன. இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயங்களில் 40 முன்பள்ளிகள் மற்றும் 640 ஆசிரியைகள் பயன் அடைகின்றனர்.

இந்த வவுச்சர்கள் உத்தியோகபூர்வமாக விநியோகிக்கும் வைபவம் கடந்த 30.12.2020 இல் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் இடம் பெற்றது. அனுசரணை வழங்கும் நிறுவனம் சார்பில் அப்பாஸ் ஹிதாயத்துல்லா கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் I.K.G முத்துபண்டா அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வவுச்சரைக் கையளித்தார்

.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியக பொது முகாமையாளர் I.U.K.செனவிரத்ன கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் A.C.M.முஸ்இல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 E1M2 11 01 2021

 

 

 E1M3 11 01 2021

 

 

 

 

 

 

  

© Provincial Planning Secretariat - EPC