கிழக்கின் அவிழ்தம் சஞ்சிகையின் பகுதி-1 2021.12.15ம் திகதியன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்வானது கிழக்குமாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை பிரதமவிருந்தினர், சிறப்புவிருந்தினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். விசேடமாக கிழக்குமாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர் திரு. அன்சார் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஏ. எஸ். எம். பாயிஸ், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான வைத்தியர் அனவர்தன், வைத்தியர் (திருமதி). பா. உதயணன், மாவட்ட இணைப்பாளர்கள், ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் சுதேசமருத்துவ திணைக்களத்தின் அலுவலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை மத்தியவங்கி மற்றும் கிழக்குமாகாண சுதேசமருத்துவ திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த போசணை விழிப்புணர்வு செயற்திட்டம் மற்றும் நடமாடும் ஆயுர்வேத மருத்துவசேவை என்பன திருகோணமலை, மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரியில் 10.12.2021ஆம் திகதியன்று இடம் பெற்றது. இதன்போது 600 மாணவர்களிற்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் பொதுமக்களுக்கான நடமாடும் சேவை மூலம் 340 பயனாளிகள் பயன்பெற்றனர்.