தேசிய சுற்றுச்சூழல் வாரம் 30.05.2022 - 05.06.2022
கருப்பொருள் "பூமியில் மட்டும்"
ஆளுநர் செயலகத்தில் தேசிய சுற்றுச்சூழல் வாரமானது 30.05.2022 ஆந் திகதி கௌரவ ஆளுநர் மற்றும் ஆளுநர் செயலாளர் அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் அலுவலகப் பணிக்குழாத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
1. 30.05.2022 ஆந் திகதி திங்கட்கிழமை அலுவலகமும் அதன் சுற்றுப்புறச் சூழுலும் சிரமாதனம்
கழிவுகளை முறையாகவும் தரம் பிரித்தும் அப்புறப்படுத்தப்பட்டது.; (நெகிழிகள்/ கடதாசி/ கண்ணாடி /உலோகம் மற்றும் சேதனப்பொருட்கள்)
2. 31.05.2022 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை காற்று மாசாக்கத்தைக் குறைப்பதன் விழிப்புணர்வுச் செயற்பாடுகள்.
• அலுவலக ஊழியர்கள் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக உந்துருளிகளைப் பயன்படுத்தியும் ஒரு சிலர் கால்நடையாகவும் அலுவலகத்திற்குச் சமூகமளித்திருந்தனர்.
• சூரிய மின் உற்பத்தியை அறிமுகப்படுத்துதல் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்குதல் தொடர்பான தகவல்களுடன் சூரிய சக்தியினால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுச் செயலமர்வொன்று அன்றைய தினம் அலுவலக ஊழியர்களுக்காக நடத்தப்பட்டது.
3. 01.06.2022 ஆந் திகதி புதன்கிழமை நீர் மற்றும் நீர் மூலாதாரங்களைப் பாதுகாக்கும் தினம்.
• அலுவலத்தின் நீர்த்தாங்கிகள் மற்றும் அலுவலகச் சுற்றுப்புற வடிகான்கள் சுத்திகரிக்கப்பட்டது.
4. 02.06.2022 ஆந் திகதி வியாழக்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களினால் தற்சார்புப் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் மிளகாய் கத்தரி போன்ற பலன்தரு மரக்கன்றுகள் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுடன் வீடுகளிலும் விடுதிகளிலும் வீட்டுத்தோட்டங்கள் செய்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.