இவ்வருடம் சிங்கள தமிழ் புத்தாண்டு சுப நேரத்தின் படி 2023.04.20 ஆம் திகதி மு.ப 6.30 மணி சுபநேரத்தில் தேசிய மரநடுகை நடாத்துவதற்கு கௌரவ விவசாய அமைச்சின் தீர்மானத்தின் படி மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம், கிழக்கு மாகாணம், மட்டக்களப்பில் மாகாண பணிப்பாளர் எந்திரி.வ.கருணநாதன் அவர்களின் தலைமையில் பல்லாண்டுகால பயன்தரும் மரக்கன்றுகள் மாகாணப்பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் நடுகை செய்யப்பட்டது. இதில் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நிதி ஆணைக்குழுவின் வேண்டுகோளிற்கு இணங்க , கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களினதும் பிரதம செயலாளரினதும் அனுமதியுடன் 2023.04.15ம் திகதியன்று குருக்கள்மடம் - அம்பிளாந்துறை பாதை சேவை மற்றும் குருமண்வெளி – மண்டூர் பாதை சேவை என்பன கட்டணங்களுடன் செயற்படும் வண்ணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.