Services provided by the Department of Social Services
01. பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு
1.1 இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு உரித்தானவர்கள்
1.1.1 நோயாளர்கள், சிரேஸ்ட பிரஜைகள், மாற்றுத் திறனாளிகளும் அவார்களில் தங்கி வாழ்வோரும்
1.1.2 விதவைப் பெண்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்.
1.1.3 கணவரினால் கைவிடப்பட்ட பெண்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்
1.1.4 பெற்றௌரின் பராமரிப்பை இழந்த 18 வயதிற்குக் குறைந்த பிள்ளைகள்
1.2 பொதுசன மாதாந்த உதவி வழங்கப்படும் தொகை விபரம் (மாதமொன்றிற்கு)
1.2.1 தனியாக தங்கி வாழும் ஒருவருக்கு - ரூ. 250.001.2.2தங்கி வாழும் ஒருவர் உள்ள குடும்பத்திற்கு - ரூ. 300.00
1.2.3 தங்கி வாழும் இருவார் உள்ள குடும்பத்திற்கு - ரூ. 350.00
1.2.4 தங்கி வாழும் மூவர் உள்ள குடும்பத்திற்கு - ரூ. 400.00
1.2.5 தங்கி வாழும் நால்வர் உள்ள குடும்பத்திற்கு- ரூ. 450.00
1.2.6 தங்கிவாழும் ஐந்து நபர்களுக்கும் ஒன்றிற்கும் மேற்பட்டவர்களுக்கும் - ரூ. 500.00
ஆகக் கூடிய தொகை - ரூ. 500.00, ஆகக் குறைந்த தொகை - ரூ. 250.00.
02. நோயாளர்களுக்கான உதவிக் கொடுப்பனவு
2.1 இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு உரித்தானவர்கள்
2.1.1 புற்று நோயாளர்கள்
2.1.2 தொழு நோயாளர்கள்
2.1.3 தலிசிமியா நோயாளர்கள்
2.1.4 சீறுநீரக நோயாளர்கள்
2.1.5 காச நோயாளர்கள்
2.2 இவர்களுள் புற்றுநோய் மற்றும் தொழுநோயாளர்களுக்கான கொடுப்பனவு பின்வருமாறு
2.2.1 குடும்ப தலைவருக்கு - ரூ. 250.00
2.2.2 முதல் அண்டிவாழ்வோர் (மனைவி) - ரூ. 100.00
2.2.3 அண்டி வாழும் ஒரு பிள்ளைக்கு - ரூ. 50.00
ஆகக் கூடிய தொகை - ரூ. 500.00இ ஆகக் குறைந்த தொகை - ரூ. 250.00
2.3 தலிசிமியா மற்றும் சிறுநீரக நோயாளருக்கு மாதாந்தம் ரூபா 500.00 வழங்கப்படுகின்றது.
2.4 காச நோயாளர்களுக்கு மாதாந்தம் போசனைக் கொடுப்பனவாக ரூபா. 5,000.00 வழங்கப்படுகின்றது.
03.சுய தொழில் உதவிக் கொடுப்பனவு
3.1 இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு உரித்தானவர்கள்
3.1.1 பொதுசன மாதாந்த உதவிப்பணம் பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.
3.1.2 சுய தொழில் மேற்கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ள மாற்றுத் திறனாளிகள் அல்லது ஆற்றல் அற்றவர்கள் எனின் தொழில் புரியக் கூடிய ஆற்றல் உள்ள அதே குடும்ப உறுப்பினர்.
3.1.3 போதிய உடல் வலுவுள்ள சிரேஸ்ட பிரiஐயை உள்ளடக்கிய குடும்பம்.
3.1.4 விதவைகள்.
3.1.5 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்.
3.1.6 போதிய வருமானமின்மை காரணமாக பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்க முற்படும் பெற்றோர் .
3.1.7 கணவன் சிறையில் இருக்கும் வருமானமற்ற குடும்பம்.
3.1.8 சுய தொழில் பயிற்சியினை பூர்த்தி செய்து புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினால் புனர்வாழ்வு பெற்றோர் .
3.2 கொடுப்பனவு அதிகூடிய தொகை உச்ச தொகையாக ரூபா - 30,000.00 பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வழங்கப்படும்
04. தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு
4.1 இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு உரித்தானவர்கள்
4.1.1 இயற்கையால் மற்றும் காட்டு யானை போன்ற விலங்குகளால் பயிர்களுக்கான அழிவு.
4.1.2 தற்செயலாக தீ விபத்தினால் வீட்டிற்கு ஏற்படும் சேதம்
4.1.3 சூறாவளியால் வீட்டிற்கு ஏற்படும் சேதம்.
4.1.4 இடி மற்றும் மின்னலினால் வீட்டுக்கு ஏற்படும் சேதம்.
4.1.5 மழை மற்றும் வெள்ளத்தினால் வீட்டுக்கு ஏற்படும் சேதம்.
4.1.6 இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் மரணத்துக்கான சடங்கு செலவு
4.2 பயிர்கள் அழிவுக்கான உச்ச தொகை - ரூபா 10,000.00 வழங்கப்படும்.
4.3 மரணச் சடங்குகளுக்காக வழங்கப்படும் உச்ச தொகை ரூபா 15,000.00
4.4 வீட்டிற்கான சேதத்திற்கு உச்சத் தொகை ரூபா 20,000.00 இரு கட்டமாக வழங்கப்படும்.
05.நிரந்தர அல்லது பாரிய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவ போக்குவரத்து உதவிக் கொடுப்பனவு
5.1கொடுப்பனவு பெறத் தகுதியானவர்கள்.
5.1.1 18 வயதிற்கு குறைந்த சகல நோய்களினாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்.
5.1.2 18 வயதிற்கு மேற்பட்டவராயின் பின்வரும் நோய்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
* புற்று நோயாளர்கள் (Cancer)
* காச நோயாளர்கள் (Tuberculosis)
* தொழு நோயாளர்கள் (Leprosy)
* தலிசிமியா நோயாளர்கள் (Thalassemia)
* சிறுநீரக நோயாளர்கள் (CKD)
* முள்ளந்தண்டு வடம் பாதிக்கப் பட்டவர்கள் (Vertebral Disc Disease)
* பாரிசவாதத்தினால் முழுமையாக அவயவங்கள் செயலிழப்புற்றவர்கள் (Paralyze)
* பாரதூரமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். (Severely Mentally Retarded )
* பாரதூரமான இருதய பாதிப்பு (Heart failure )
* தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் (Muscular Palsy)
* மூளை முடக்கு வாதம் (Cerebral Palsy)
* பாரதூரமான வலிப்பு (Epilepsy
* தைரொயிட் இனால் பாதிக்கப்பட்டவHகள் (Thyroid)
* நீரிழிவு காரணமாக அவயங்களை இழந்தோர் (Loss of Body parts due to diabetes)
5.1.3 மாதாந்தம் ரூபா 1,500.00 வீதம் மாவட்டத்தினுள் அல்லது மாவட்டத்திற்கு வெளியே வதிவிடத்திலிருந்து வைத்தியசாலைக்கான ஒரு வழிப் பயணத் தூரம் 5KM இற்கு மேற்படின் கொடுப்பனவு வழங்கப்படும்.
06.மூளை வளர்ச்சியற்ற மந்த புத்தியுள்ள மற்றும் கடுமையான நிரந்தர நோய்களினால் பாதிக்கப்பட்ட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கொடுப்பனவு.
6.1 கொடுப்பனவு பெறத் தகுதியானவர்கள்.
6.1.1 பிறப்பிலேயே மூளை வளர்ச்சி குன்றிப் பிறந்த குழந்தைகள்.
6.1.2 நோய் காரணமாக பிறப்பின் பின்னர் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
6.1.3 நிரந்தர நோய்களினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் குழந்தைகள்.
6.1.4 தீர்க்க இயலாத நிரந்தர நோயினால் பீடிக்கப்பட்டு பிறரின் பராமரிப்புடன் படுக்கையால் இருக்கும் குழந்தைகள்.
6.2 மாதாந்தம் ரூபா. 1,000.00 வீதம் காலாண்டுக்கு ஒரு முறை ரூபா 3,000.00 வீதம் குழந்தைகளின் போசாக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுக்காக இக்கொடுப்பனவு தொடர்ச்சியாக 12 வயதை நிறைவு செய்யும் வரை வழங்கப்படுகிறது.
07.மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
7.1 வழங்கப்படும் உபகரணங்கள்
7.1.1 மூக்குக் கண்ணாடி (Spectacles)
7.1.2 காது கேட்கும் கருவி (Hearing Aid)
7.1.3 கையால் சுற்றும் முச்சக்கரவண்டி (Try cycle)
7.1.4 நடைச்சட்டம் (Walking Frame.)
7.1.5 வெள்ளைப்பிரம்பு (White Cane.)
7.1.6 சக்கர நாற்காலி (Wheel Chair)
7.1.7 பிள்ளைகளுக்கானது. (Child.)
7.1.8 வளர்ந்தவர்களுக்கானது (Normal)
7.1.9 வளர்ந்தவர்களுக்கானது (Modified)
7.1.10 வளர்ந்தவர்களுக்கானது (Commode)
7.1.11 ஊன்று கோல்
7.1.1.1 Under Arm
7.1.1.2 Fore Arm
7.1.12 செயற்கை அவயவங்கள் (Artificial Limp) பொருத்துதல்
08. மாற்றுத்திறனாளிகள் குடியிருக்கும் வீட்டில் அணுகும் வசதியை ஏற்படுத்துவதற்கான கொடுப்பனவு
8.1 கொடுப்பனவு பெறத் தகுதியானவர்கள்.
8.1.1 நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி முச்சக்கர வண்டி மற்றும் வெள்ளைப் பிரம்பு பயன்படுத்துவோர்.
8.1.2 குடியிருக்கும் வீடு சொந்தமாகவோ அல்லது பெற்றௌரின் / பாதுகாவலரின் சொந்த வீடாகவோ இருத்தல் வேண்டும்.
8.1.3 வாடகை வீடாயின் 05 வருடங்களுக்கு குறிப்பிட்ட வீட்டில் வசிப்பதிற்கு வீட்டு உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்து கிராம சேவை உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தல் வேண்டும்.
8.1.4 நகர்வதற்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்கும் முகமாக முதல் கட்டமாக ரூபா 10,000.00 இரண்டாம் கட்டமாக ரூபா 5,000.00ம் வழங்கப்படும். (அதி உச்ச தொகை ரூ.15,000.00 )
09.தனிநபரால் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் இலவச வேவையாக நடாத்தப்படும் முதியோர் இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் வசிப்பவர்களுக்கான கொடுப்பனவு
9.1 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு உணவுக்காக நாளொன்றுக்கு ரூபா 50.00 வீதம் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
9.2 பகல் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு உணவுக்காக மாதம் ஒன்றிற்கு ரூபா.100 வீதம் வழங்கப்படுகின்றது.
9.3 முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியோர் ஒருவருக்கு மாத மொன்றிற்கு ரூபா 500.00 வீதம் உணவுக்காக வழங்கப்படுகின்றது.
தனிநபரால் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் இலவச வேவையாக நடாத்தப்படும் முதியோர் இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தினை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவு
9.4 கட்டட நிர்மாண பணிகளுக்கும் பழுது பார்த்தலுக்குமாக வருடமொன்றுக்கு உச்ச தொகையாக ரூபா 75,000.00 வழங்கப்படும் என்பதுடன் தளபாடம், உபகரணம் மற்றும் துணிமணி கொள்வனவிற்கு வருடமொன்றிற்கு உச்ச தொகையாக ரூபா 40,000.00 வழங்கப்படுகின்றது.
9.5 மேலும் அத்தியாவசிய அடிப்படையில் திணைக்களத்தினால் வருடாந்தம் மாகாணத்துக்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை மூலம் கட்டட நிர்மாணம் மற்றும் கட்டட விரிவுபடுத்தல் வேலைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
10.நலிவுற்ற மக்களுக்கான தொழிற்பயிற்சிகள்
10.1. திணைக்களத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக நலிவூற்றவர்கள் அல்லது அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் சுய தொழிலை மேற்கொள்வதற்கு வேண்டிய தொழிற்பயிற்சி நெறிகள் இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன் வழங்கப்படுகின்றன.
10.2. மேலும் பயிற்சி நெறிகளில் சித்தியடைபவர்களுக்கு திணைக்களத்தினால் தொழிற்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.