Eastern Provincial Council signed an Agreement with Industrial Technology Institute Colombo a statutory body under Ministry of Industries to provide consultancy services on measures required for construction and operation of an ISO certified laboratory to analyze organic produce/food samples in Eastern Province and elsewhere. The event was held in Paddy Marketing Board Regional Office Building Kantale on 27th December 2022.
கிழக்கு மாகாணத்தில் பழச் செய்கைக்கு ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு 50% பங்களிப்பின் கீழ் பழச்செடிகளை வழங்கத் தீர்மானித்துள்ளேன். இதற்காக விவசாயிகளை தேர்ந்தெடுக்கும் போது சாதி, மத, அரசியல் வேறுபாடின்றி அதற்கு தகுதியான, மற்றும் திறமையான விவசாயிகளை மட்டுமே தேர்வு செய்ய உத்தேசித்துள்ளேன். இத்திட்டத்திற்கு விவசாயிகளை தெரிவு செய்யும் போது பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் விவசாயிகளைத் தெரிவு செய்தல் மற்றும் பரிந்துரைகளை சமர்பித்தல் விவசாயபோதனாசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட பிரதி பணிப்பாளர் மற்றும் மாகாண பணிப்பாளர் ஊடாக மாகாண விவசய அமைச்சுக்கு 2023-01-15ஆந் திகதிக்கு முன் வழங்கப்படல் வேண்டும். இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி விவசாய போதனாசிரியர்களினால் விவசாயிகளை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் அவர்களின் விண்ணப்பங்களும் பின்வரும் நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் படி மீண்டும் எனக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக விவசாயிகள், மாகாண சபை இணையத்தளத்தில் இருந்தும் விவசாய அமைச்சு இணையத்தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் விவசாய போதனாசிரியர் அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவத்தின் பிரதி உள்ளதுடன், அதன் படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் அல்லது அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் தங்களின் கோரிக்கையை மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி அனுப்பிவைக்குமாறு விவசாயிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.