கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் பயிற்சி நெறி மற்றும் போட்டிப் பரீட்சை, நேர்முகத் தேர்வு போன்றவற்றில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சுதேச மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு, கல்வி மற்றும் வார்த்தகக் கண்காட்சி கடந்த 2023-09-08, 09, 10 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.