அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் TCAMP-PRDP நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக ரூ.72 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மேற்பார்வையோடு புனரமைக்கப்பட்ட கொக்குவில் - சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதியானது 2023.07.12 ம் திகதி கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இவ்வருடம் சிங்கள தமிழ் புத்தாண்டு சுப நேரத்தின் படி 2023.04.20 ஆம் திகதி மு.ப 6.30 மணி சுபநேரத்தில் தேசிய மரநடுகை நடாத்துவதற்கு கௌரவ விவசாய அமைச்சின் தீர்மானத்தின் படி மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம், கிழக்கு மாகாணம், மட்டக்களப்பில் மாகாண பணிப்பாளர் எந்திரி.வ.கருணநாதன் அவர்களின் தலைமையில் பல்லாண்டுகால பயன்தரும் மரக்கன்றுகள் மாகாணப்பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் நடுகை செய்யப்பட்டது. இதில் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.