‘Thirasara Krushisanskruthiya’ செயற்றிட்டத்தின் கீழ் சிறந்த விவசாய சம்மேளனத்திற்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் பரிசளிக்கும் வைபவம் கௌரவ ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண விவசாயப் பணிப்பாளர் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த 09.06.2023 அன்று பிரதம அதிதியாக கௌரவ ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவர்களும், விசேட அதிதிகளாக கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. எஸ். வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபில அத்துகோரள அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய மரநடுகை வேலைத்திட்டம் தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் பேரில் கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பயன் தரும் மரநடுகை நிகழ்வு கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் 30.05.2023 அன்று நடத்தப்பட்டிருந்தது. இதன் போது மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. எம். எஸ். எ. கலீஸ் அவர்களின் தலைமையில் அனைத்து விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர்.