கிழக்குமாகாணக் கல்வி அமைச்சின் கீழுள்ள அம்பாறை, மஹாஓய ஆகிய வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குள் வரும்தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கல்விமேம்பாடு, முன்பள்ளிக்கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக பிளான் இன்டர்நேஷனல் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் 7.1  மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், பிளான் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை  2019 . 10 . 28 ஆம் திகதி கல்வி அமைச்சு மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அமைச்சின் செயலாளர் .கே.ஜி.முத்துபண்டா, நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நதீஜாநூர்  ஆகியோர் இந்த உடனப்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

முன் பள்ளிக்கல்வி அபிவிருத்தி, பாடசாலைக்கல்வி அபிவிருத்தி, சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு, கல்வித்தர மேம்பாடு போன்றவற்றுக்காக இந்த நிதி செலவு செய்யப்படவுள்ளது. இந்த வைபவத்தில் கிழக்குமாகாண முன்பள்ளிக்கல்விபணியகதவிசாளர் எம்..உதுமாலெப்பை, கிழக்குமாகாணகல்வி அமைச்சு திட்டமிடல்பணிப்பாளர், .சி.எம்.முஸ்இல்அமைச்சின் மேலதிக செயலாளர்தவராஜா, மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளர் விஜயானந்தமூர்த்தி, அம்பாறை மற்றும் மஹாஓயா வலயக்கல்விப்பணிப்பாளர்கள் உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்

 a.460x320

b.460x320

 

 

 

 

 

 

© Provincial Planning Secretariat - EPC