E1M1 23 01 2020

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் முன்னோடி நடவடிக்கையாக Visit East Sri Lanka” என்ற நாமத்துடன் டிஜிடல் சந்தைப்படுத்தல் சுற்றுலாத்துறை பிரசார நடவடிக்கையின் அங்குரார்ப்பன வைபவம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கடந்த 23.01.2020 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் வடிவமைக்கபட்ட சுற்றுலாத்துறை வழிகாட்டித் தகவல்கள் அடங்கிய இணையத் தளமும், கிழக்கின் சுற்றுலாத் தளங்கள் சம்பந்தமான காணொளிகள் அடங்கிய இறுவட்டு மற்றும் சுற்றுலாத்துறை வழிகாட்டிக் கைநூல் ஒன்றும் ஆளுநர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 

 

E1M2 23 01 2020

இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், பிரதம செயலாளர், துசித பீ. வணிகசிங்க, பணியகத்தின் பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம். பாயிஸ் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர்கள் உட்பட சுற்றுலாத்துறை பணியகத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி இணையத் தளத்தினை www.visiteastsrilanka.lk என்ற முகவரியூடாகவும் இதன் ஓர் அங்கமாக @visiteastsrilanka என்ற முகநூல்(Facebook), இன்ஸ்டக்ராம் (Instagram) மற்றும் யூடியுப் (YOUTUBE) பக்கத்தினூடகவும் மேற்படி டிஜிட்டல் சந்தைபடுத்தல் சுற்றுலாத்துறை பிரசார நடவடிக்கைளை சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பார்வையிட முடியும்.

E1M3 23 01 2020

இத்தைகைய செயற்பாடுகள் அறியப்படாத கிழக்கின் சுற்றுலாத் தளங்கள் பற்றிய தகவல்களை உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு உறுதுணையாக அமையும் என பணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 E1M4 23 01 2020

 E1M5 23 01 2020

 E1M6 23 01 2020

© Provincial Planning Secretariat - EPC