பணிப்பாளர்


திருமதி. உ.கவிதா

கிராமிய கைத்தொழிற்துறைத் திணைக்களம்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
Tel: 026-2222492
Fax: 026-2223543
Email : industries@ep.gov.lk

 

OrgChart

தூரநோக்கு
போட்டித் தன்மையுள்ள சந்தைக்கான தரமான கிராமிய கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள்.

பணிக்கூற்று
சூழல் நேய மற்றும் உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்டதுமான குடிசை, நுண் மற்றும் சிறிய அளவிலான கைத்தொழில்களை விருத்தி செய்தல் மற்றும்  முன்னேற்றுதல் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதலும், கிராமிய கைத்தொழில் துறை மூலம் அடையப்படும் நன்மைகளின் பங்கினை அனைவருக்கும் நியாயமாக அதிகரித்தலும் உள்நாட்டு தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்தலும்.

முனைவுப்பகுதி – 1   :  உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்   அபிவிருத்தி

இலக்குகள்

- களியைஅடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் திறன்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
- உணவு பதனிடல் தொடர்பான திறன்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
- தும்பை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் திறன்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
- தச்சுவேலை/ மர அலங்கார வேலைத்திறன்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
- பாய் பின்னுதல் தொடர்பான கைத்தொழில் திறன்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளது.

      
முனைவுப்பகுதி – 2   : தொழில் முனைவு/முயற்சியாண்மைச் செயற்பாடுகளில் அரச, தனியார் மற்றும் சமூகக் குழுக்களின் பங்குடமையை /  பங்களிப்பை முன்னேற்றல்.
      
இலக்குகள்

அரச தனியார் பங்குடமை அணுகுமுறை மூலம் விருத்தி செய்யப்பட்ட கிராமிய கைத்தொழில்கள்.

    
முனைவுப்பகுதி – 3 : தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட தொழில்சார் திறன் அபிவிருத்தி பயிற்சி வழங்கல் மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்கல்.
      
இலக்குகள்

- தேசிய தொழிற்கல்வி அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிலையங்கள் விருத்திசெய்யப்பட்டுள்ளன.
- ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட தொழில் வாய்ப்புகள்.

    
முனைவுப்பகுதி – 4   :  கிராமிய கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் உற்பத்தித் திறனை விருத்தி செய்தல்.
      
இலக்குகள்

- போட்டித் தன்மைக்கு தாக்குப் பிடிக்கும் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
    
முனைவுப்பகுதி – 5   : சந்தை வாய்ப்புகள் மற்றும் சந்தைபடுத்தல் தொடர்புகளை முன்னேற்றல்.
 

இலக்குகள்

- விருத்தி செய்யப்பட்ட சந்தைப்படுத்தல் தொடர்புகள்.
- தாபிக்கப்பட்ட இணையவழி சந்தைபடுத்தல்.

 

முனைவுப்பகுதி – 6   : நிறுவனத்தின் இயலளவை கட்டி எழுப்புதல் மற்றும் ஆளுகை  விருத்தி.

இலக்குகள்

- பயிற்றப்பட்ட தொழில் திறன் கொண்ட கைத்தொழில் துறை பணியாட்கள்.
- வழங்கப்பட்ட தரமுயர்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்.

1.250x175

கிழக்கு மாகாண தொழில்துறைத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும்  கிழக்கு கைத்தொழில் கண்காட்சி என்ற தொனிப் பொருளிலான மாபெரும் கண்காட்சியானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 05 , 06 , மற்றும்  07 ஆம் திகதிகளில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைந்துள்ள தொழில்துறைத்திணைக்கள வளாகத்தில் நடாத்தப்பட்டது. கிழக்கு மாகாண  மாவட்டங்களின் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறுகைத்தொழில்  முயற்சியாளர்கள் திணைக்களத்தின் நிலைய போதனாசிரியர்கள்,தேசிய அருங்கலைகள் பேரவையில்  பதியப்பட்ட கைவினைஞர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  கைத்தறி நெசவு உற்பத்திகள்,களிமண் உற்பத்திகள், தும்பு ஓலை சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆடை ஆபரணங்கள், சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்திகள்,தோற்பொருட்கள்,உணவு  பதனிடல், அலங்கார கல்லினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் என்பன இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC