E1M1 01 06 2020

இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்ஜென் (ஓய்வு) முகமது சாத் கட்டக் மற்றும் கெளரவ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தினர்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மிகவும் வெற்றிகரமாக இருந்தபோதிலும், எங்களது கவனம் எப்போதும் பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் தான் இருக்கும் என்று கூறினார்.மேலும் , கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மிகவும் பயனுள்ளதாக்குவதற்கான தொழில்நுட்ப அறிவை வழங்கவும்  ,கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான  உதவியை ஆளுநர் கோரியுள்ளதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.


பெளத்தர்களுக்கான  புனித யாத்திரைத் தலமான தக்ஷிலாவா, பெளத்த சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானுக்கு ஈர்க்க தேவையான வசதிகளையும் வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார். இலங்கை தேயிலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு ஆளுநர்  கேட்டுக்கொண்டார். "இலங்கை தேநீர்" என்ற பெயருக்கு பாகிஸ்தானுக்கு வலுவான விருப்பம் இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளில் கென்யா இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது என்றும் உயர் ஸ்தானிகர் கூறினார்.

 கிழக்கு மாகாணத்தின் மாணவர்களுக்கு  பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து இந்த விவாதத்தில்  கவனம் செலுத்தப்பட்ட்து .

 

 

E1M2 01 06 2020

 

 

E1M3 01 06 2020

 

© Provincial Planning Secretariat - EPC