E1M1 20 05 2020

 

விவசாயிகளுக்கு சேதனப் பசளைகளை அறிமுகப்படுத்தும் போது எந்தவொரு அழுத்ததிற்கும் பணத்திற்கும் அடிபணிய வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் விவசாய அதிகாரிகளின் சந்திப்பின் போது தெரிவித்தார். இது போன்ற அழுத்தங்களுக்கு உட்பட்;டு செயற்படுவத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு விஷம் கொடுப்பதைப் போன்றது எனக் குறிப்பிட்டார்.

18ஆம் திகதி பிற்பகல் இடம் பெற்ற சௌபாக்கிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்திற்கு இணைந்ததாக நஞ்சற்ற சேதனைப் பசளை பயிர்;ச் செய்கை முறைக்கு விவசாயிகளை உற்படுத்தும் ‘தெயட ஹிதனி கொவிதென’ செயற்றிட்டத்தின் முன்னேற்ற ஆய்வூக் கூட்டத்தின் போது இவ்வாறு குறிப்பிட்டாhர்.  

கந்தளாய் கந்தளாவ 500 ஏக்கர் பகுதியில் மேற்கொள்ளப்படும் சேதனைப் பசளை மாதிரி நெற்பயிர்ச் செய்கை பார்வையிடுவதற்காக கௌரவ ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட வெளிக்கள பயணத்தின் போது இந்நிகழ்ச்சி இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

அங்கு அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
“விவசாயத் திணைக்களம் தலையிட்டு சேதனைப் பசளை பயன்பாட்டை பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும்.  சேதனைப் பசளை பிரயேகாக அறியாமையால் தான் விவசாயிகள் ரசாயன உரங்களைக் தேடி கடைகளுக்குச் செல்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளை அகற்ற தேவையான முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம். இதுபோன்ற கடைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கவும். எங்களுக்கு ஒரு திணைக்களம் என்றவகையில் விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு அவசியமாகக் காணப்படுகின்றது .நாட்டில்  உள்ள அனைத்து மக்களுக்கும் விஷம் இல்லாத உணவுகளை உண்ண உரிமை உண்டு. ஆனால் இந்த உணவுகள் இன்று சந்தையில் விலை அதிகம். இது ஒரு சாதாரண விவசாய சந்தையாக மாறினால் சந்தையில் இந்த உணவுகளின் விலை குறையும். அதனால்தான் நஞ்சற்ற முறையில் பயிரிட விவசாயியை ஊக்குவிக்க வேண்டும். இது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாக மாறும். ” எனக் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் மாகாண சபையின் தலைமைச் செயலாளர் துசித பி.வணிகசேகர, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, விவசாய  அமைச்சின் செயலாளர் ஏ.சிவநாதன், ‘தெயட ஹிதனி கொவிதென’ செயற்றிட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் கீர்த்தி விக்ரமசிங்க மற்றும் நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 E1M2 20 05 2020

 

 E1M3 20 05 2020

 

E1M4 20 05 2020

© Provincial Planning Secretariat - EPC