தூரநோக்கு
மாற்ற மிகு மாகாண திட்டமிடல் செயன்முறையினை இயக்கும்; தகுதிமிக்க முதன்மை நிறுவனம்.

பணிக்கூற்று
பயன்மிகு புத்தாக்க முறைமைகள், ஆளுமை விருத்தி மற்றும் புதிய முயற்சிகள் என்பவற்றினூடாக மாகாண நிறுவனங்களை தொழில்திறனடிப்படையில் ஒருங்கிணைத்து வழிப்படுத்தி சீரான சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதிசெய்தல்

முனைவுப்பகுதிகள் - 1 : மாகாண திட்டமிடல் செயன்முறைகளும் ஒழுங்கமைப்புகளும்
      
இலக்குகள்
- முழுமையானதும் பயனுறுதிமிக்கதுமான நடுத்தரகால அபிவிருத்தி திட்டம்
- சம அணுகுமுறையுடனான வளங்களின் உச்சப்பயன்பாடு
     
      
முனைவுப்பகுதிகள் - 2 : நிகழ்ச்சிதிட்டங்கள் கருத்திட்டங்களின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும், கண்காணிப்புகளும்
      
இலக்குகள்
- திட்டமிடல், அமுலாக்கலில் செயற்திறன் மிக்க ஒருங்கிணைப்பு
- ஒருங்கிணைந்த வருடாந்த நிகழ்ச்சித்திட்டங்களை  கண்காணிக்கும் முறைமைகளை ஸ்திரப்படுத்தல்

முனைவுப்பகுதிகள் - 3 : தகவல் முகாமைத்துவமும் பரிமாற்றமும்.
      
இலக்குகள்
- கொள்கை, திட்டமிடல், மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் முறையினை நடாத்துதல்.
- பொதுமக்கள் அணுகக் கூடிய வினைத்திறனுடையதான தகவல் தளத்தை கொண்டிருத்தல்

முனைவுப்பகுதிகள் - 4 :  நிறுவன அபிவிருத்தியும் நல்லாட்சியும்
      
இலக்குகள்
- ஆற்றல்மிகு உத்தியோகத்தர்களின் வினைத்திறன்மிக்க செயலாற்றுகை                        
- செயற்றிறன்மிக்க செயலாற்றுகைக்கான நவீன அலுவலக வசதிகளும், முறைமைகளும்                        
- சமத்துவம் பக்கச்சார்பின்மையினை உறுதிப்படுத்தல்.   

© Provincial Planning Secretariat - EPC