பணிப்பாளர்


திரு.M.K.M.மன்சூர்

கல்வித் திணைக்களம்

உவர்மலை
திருகோணமலை
Tel : 026-2222106
Fax : 026-2222871
e-mail: education@ep.gov.lk

 

Web: www.eastpde.edu.lk

OrgChart

தூரநோக்கு
வளம் மிக்க தேசிய மற்றும் சர்வதேசத்திற்கான தகுதிவாய்ந்த பிரஜைகள்.

பணிக்கூற்று
உகந்த கற்றல் சூழல் மூலமும் மற்றும் ஆசிரியர்களினதும் துறைசார் முகாமையாளர்களினதும் தொழில் வாண்மையை விருத்தி செய்வதன் மூலமும், மாணவர்களிற்கு சமனாகவும் நியாயமாகவும், விழுமியங்களுடனும் நம்பிக்கைகளுடனும் கூடிய, தொழில் வாய்ப்பை நோக்காகக் கொண்ட கல்வியை வழங்குதல்.

முனைவுப்பகுதி – 1 : ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நியாயமாக பெறுதலும் பங்கு பற்றுதலும்
      
இலக்குகள்   
-  5 தொடக்கம் 16 வயதில் உள்ளபிள்ளைக் பாடசாலையில் சேருதலை உறுதிப்படுத்துதல்.
-  விசேட தேவையுள்ள பிள்ளைகளின் பங்குபற்றுதலை  உறுதிப்படுத்துதல்
-  பாடசாலைக் கல்வியில் பங்குபற்றாத பிள்ளைகளுக்கான முறைக் கல்வி நிகழ்ச்சிகளை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துதலை   உறுதிப்படுத்தல்.
      
முனைவுப்பகுதி – 2 : மாணவர்களின் கல்விப் பெறுகைகளையும்,அடைவுகளையும் மேம்படுத்துதல்
      
இலக்குகள்   
- அவசியமான நுட்பங்களுடனும் கற்றல் வசதிகளுடனும் கூடிய ஆரம்பப்பிரிவிற்கான வகுப்பறைகளை வழங்குதல்      
- உயர்ரககற்றல் வெளிகளையும், வகுப்பறைக் கட்டடங்களையும் மற்றும் கற்றல் உபகரணங்களையும் வழங்குதல்
- கற்றல் மற்றும் கற்பித்தல் செயன்முறைகறிக்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தல்
- இடைநிலை மாணவர்களின் அடைவ மட்டங்களை மேம்படுத்தல்
    
முனைவுப்பகுதி – 3 : மாணவர்களிடையே சுகாதார மற்றும் போசனைப் பழக்கங்கள்.
      
இலக்குகள்   
- உற்பத்தித்திறனுள்ள சுகாதாரமான சூழலை சகல பாடசாலைகளிலும் உறுதிப்படுத்தல்
- போதியளவிலான நீர் மற்றும் சுகாதார வசதிகளை சகல பாடசாலைகளிலும் உறுதிப்படுத்தல்
    
முனைவுப்பகுதி – 4 : மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மென்திறன்களையும், சமூகத்திறன்களையும் அபிவிருத்தி செய்தல்
      
இலக்குகள்   
- இணைவிதான செயற்பாடுகள் மூலம் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மென்திறன்களையும் சமூகத்திறன்களையும் அபிவிருத்தி செய்தல்
    
முனைவுப்பகுதி – 5 :  மொழியறிவையும் கணித அறிவையும் மேம்படுத்தல்.
      
இலக்குகள்   
- சகலமாணவர்களும் மொழித்திறனிலும் கணித அறிவிலும் பாண்டித்தியம் பெறுவதை உறுதிப்படுத்தல்
- பாடசாலை செல்லாத சிறுவர்களின் மொழியறிவு, கணித அறிவு பெறுவதை உறுதிப்படுத்தல்

முனைவுப்பகுதி – 6 : நிறுவன தகவுதிறன் அபிவிருத்தி மற்றும் ஆளுகை.
      
இலக்குகள்   
- கல்விச் சீர்திருத்தங்களிற ;கேற்ப ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தல்
- அதிபர்களினதும் கல்வி அதிகாரிகளினதும் தகவுல் திறன்களை வலுவூட்டுதல்
- பாடசாலை மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தல்
- கல்வி நிறுவனங்களின் உற்பத்தித் திறனைமேம்படுத்தல்
- நிறுவனங்களின் பெறுகைகளையும்,நிகழ்ச்சிகளையும், திட்டங்களையும் கண்காணித்தலும், மதிப்பிடுதலும்.

© Provincial Planning Secretariat - EPC